ஆள் உயர  மாலை

  • Post category:General

கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா. அறிவாலயமே மக்கள் கூட்டத்தால் அதிர்ந்து போய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கழகத் தொண்டர்கள், கழக முன்னணியினரை மிஞ்சும் வகையில், ஒருவர் ஆளுயர மாலையைப் பலபேர் துணையுடன் கலைஞருக்கு அணிவித்துவிட்டுச் செல்கிறார். அவர் ஒரு தொழிலதிபர். உடனே அருகிருந்தவர்கள் “என்ன அண்ணா ? என்ன எங்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அவர் ஆளுயர மாலையைப் போடுகிறாரே, என்றனர். அதற்கு அரசியல் சாணக்யரான கலைஞர் அவர்கள் “ஆமாம். நானும் பார்த்தேன் . இந்த மாலை ஆளுயர மாலைதான். அந்த ஆள் உயர வேண்டாமா?அதான் “ எனச் சொன்னதும் கூடியிருந்தவர்களுக்குச் சிரிக்க சொல்லியா தரவேண்டும் ?