தந்தை பெரியார் அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கின்றார் . வந்து போவோர் அனைவரும் கவலையுடன் “அய்யா உடம்பைப் பார்த்துக்கொள்ளுங் கள், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று சொல்கின்றார்கள் . பெரியார் மிகவும் கோபமாக “எல்லோரும் இதையேதானே சொல்கின்றிர்கள்! யாரவது எப்படி என்று சொல்கின்றிர்களா? “ என்கிறார் .
அடுத்த சில நாட்களிலே ஒரு பெண்மணி வருகின்றார் . அம்மா என்ன வேண்டும் என்கின்றார் பெரியார்.
அய்யா நான் தங்களைக் கவனித்துக் கொள்ள வந்துள்ளேன். அப்பா சொன்னார்கள் என்கின்றார். அவர் சிரித்துக் கொண்டே “நீங்கள் சின்ன பெண்,வேறு வேலையில்லையா உங்கட்கு, வீட்டிற்குப் போங்கள்“ என்கின்றார் பெரியார். அவரோ முடியாத ! , தங்களைப் பார்த்துக் கொள்வதுதான் என் வேலை என்கின்றார்.
ஒவ்வொன்றாகப் பார்த்துச் சரி செய்து, எள் என்றால் எண்ணையாக, அனைத்தையும் கவனித்துக் கொண்டு, வந்தவர்களை ஒழுங்கு படுத்தி அவரது உணவு, ஒய்வு என்று மிகவும் கண்டிப்பாக பெரியரையே, இது உங்கட்கு ஒத்துக் கொள்ளாது உண்ணக் கூடாது என்று கண்டிப்புடன் இருக்கும் வரை அனைத்தும் அவரே என்ற அளவிற்கு பணி புரிகின்றார். பெரியார் அவரைப் பல முறை நீங்கள் திருமணம் செய்து கொண்டு வாழும் படி, போகக் சொல்லி முயற்சி செய்து பார்க்கின்றார். அவரது தந்தையாரிடமும் சொல்கின்றார். அய்யா இப்போது தான் நீங்கள் நலமுடன் இருக்கின்றீர்கள். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விடுகின்றார்.
முகம் சுளிக்காமல் பெரியாருக்கு அனைத்தையும் செய்து செவிலியராக, சமையல் காரராக, (அதுவும் வேனில் பயணம் செய்யும் போதே காய்கறிகளை நறுக்கிவைத்துக் கொண்டு நிற்கும் இடத்தில் சமைத்து உணவு தயார்!), செயலராக, தாயாக, அவருடைய கோவத்தை அடக்கும் அமைதியாளராக அவரையே கண்டிக்குக்கும்
மருத்துவராக இப்படித் தன் வாழ்நாளே பெரியார், தன் வாழ்க்கையே அவரது உடல் நலம் என்று உலகில் யாரும் இருந்ததாக வரலாறே இல்லை! நேரே பார்த்தவர்களுக்குத்தான் அதன் முழு ஆழமும் தெரியும்!
அவரை விட அம்மா சிக்கனம். சாப் பாட்டில் உள்ள மிளகும், கறிவேப்பிலையுங் கூட அடுத்த சமையலுக்கு உதவும் என்ற அளவு சிக்கனம்! எதையும் வீணாக்கிய தாகச் சரித்திரமே இல்லை! எளிமையின் சின்னம் அவர்!
உழைப்பு எப்போதும் சுறு சுறுப்புடன் தான்! வீணாக்க நேரங்கிடையாதே! மாநாடு கூட்டங்கள் என்றால் அங்கே அவர்தான் புத்தக வியாபாரி ! கூட்டம் முடிந்ததும் அய்யாவி டமிருந்து முதல் கேள்வி எவ்வளவு புத்தகம் விற்றது என்பதுதான்!
அவர் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமல்ல! அனைத்தையும் தூசியாகத் தட்டி விட்டவர். தூற்றியவர்களே பின்னர் போற்றினார்கள் என்பதுதான் வரலாறு!
கொள்கையிலே அய்யாவைப் போன்றே துணிவும், சமரசம் செய்யாத மானமும்! திருசியிலே சிறையில் இறந்தவர்களின் உடலைத் தர மறுத்த போது முதல்வர் காமராசரை நேரிலே பார்த்து அவரே அஞ்சும் படி கர்ச்சித்தவர்! உடலைப் பெற்று ஊர்வலம் நடத்திக் காட்டியவர். இராவண லீலாவை நடத்திக் காட்டியவர். அடக்குமுறையின் போது கழகத்தைக் கட்டிக் காத்தவர்.
அங்கு நான் சென்றிருந்த போது அவ்வளவு பெரிய பெரியார் திடலிலே அம்மா வெறுந்தரையிலே அமர்ந்திருக்கின் றார்கள். அருகே அய்யா ஆளவந்தார் மட்டுந்தான் இருக்கின்றார். எனக்கோ அதிர்ச்சி! ஆளவந்தார் என்னை விரட்டு கின்றார்! நீ ஏன் இங்கே வந்தாய், உடனே சென்று விடு என்கின்றார்! அவ்வளவு கடுபிடி! அதில் அம்மாவின் உடல் நலம் மிகவும் பாதிக்க வைத்து விட்டார்கள் எதிரிகள்! கழகத்தை ஒழித்துவிட நல்ல தருணம் என்று எதிரிகள் கணக்குப் போட்டுத் துரோகிகளுடன் இணைந்து முயன்றனர். ஓரளவு வெற்றியும் பெற்று விட்டனர் என்றே சொல்லும் அளவில் நிலை இருந்தது ! வருமான வரித்துறையின் மூலம் முடக்கப் பார்த்தனர்.
ஒரு சமயம் ஆசிரியர் அய்யாவிடம் உங்கள் உழைப்பிலேயே எதை மிகவும் மகிழ்ச்சியாக நினைவு கூறுகின்றீர்கள் என்று கேட்டேன் .அப்போது சொன்னார் வருமான வரி டிரிப்யூனலில் இருந்து மீண்டதைத்தான் என்றார் ! மீண்டது மட்டுயமல்ல தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றோம் என்றார் !
நாகம்மை குழந்தைகள் இல்லம் அம்மா அவர்களின் இதய மகிழ்ச்சி! அதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ! அந்தக் குழந்தைகளின் அம்மா அம்மா தான் அவர்க்குப் பிடித்த இன்னிசை!
அம்மாவின் கடைசி நாட்கள் சோத னைகள் நிரம்பியனவாக இருந்தாலும் அவர் ஆசிரியர் மீது வைத்திருந்த நம்பிக்கை அவருக்கு ஆறுதலைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும் ! யாரிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அம்மா நன்கு உணர்ந்து சொல்லியும் சென்றிருப்பார்கள் என்று தான் நம்புகின் றேன். நூற்றாண்டு கொண்டாடுகின்றோம் என்றால் அது நன்றியும், மகிழ்ச்சியும் கலந்த நினைவுகள் . நேரிலே கண்டவர்கள் மறக்க முடியாது !
அவர் ஓர் உன்னதப் பிறவி ! அர்ப் பணித்த வாழ்க்கை ! மனதில் நிறைந்தவர்!
வாழ்க அம்மா !