கட்டுமரம்

கண்ணீர் கடலில் மிதந்துவந்தது அந்தக் கட்டுமரம்!
மக்கள் திரளில் திளைத்துவந்தது அந்த மஞ்சள்துண்டு!
கட்டுமரமும் மஞ்சள்துண்டும்வசவாளர்கள் உமக்கிட்டக் குறியீடா?
இல்லவே இல்லை – தொண்டர்படைக்குநீ வழங்கிய உம் அடையாளம்.! 
இடஒதுக்கீடு போராட்டம்உனக்கென்ன அவ்வளவு விருப்பமோ?
இறுதிமூச்சை நிறுத்திய பின்னும்இடம்பெற போராடி வென்றிருக்கிறாயே! 
இரவல் பெற்ற இதயத்தைதிருப்பித்தர அண்ணனிடம் சென்றாயோ?
உன் அண்ணனிடம் நீ சென்றுவிட்டாய்
அண்ணனாய் உனையேற்ற உடன்பிறப்புகளுக்கு? 
சென்று வா தலைவா!
பெரியரிடமும் அண்ணாவிடமும் செல்!
மக்களுக்கு செய்த நன்மையெல்லாம் சொல்!
கவலைமறந்து அவர்களிடம் உரையாடு!! 
ஆனால்இரவு ஓய்வெடுத்துவிட்டுகாலை எழுந்துவிடு தலைவா!
நாளை மெரினாவில்இரு சூரியன்கள் உதிக்கட்டும்!! 
உன் நீண்ட துயில்எங்களுக்கு நீங்கா துயர்!
இருப்பினும் அழுவதற்கில்லை அரக்கரே!
அரக்கர் கூட்டம் அழுவதில்லை!
வாழ்க எம் பேரரக்கர் புகழ்!! 
– சுதாகர் சிவசாமி