கார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்

இந்தியத் துணை கண்டம் சென்ற வாரம் பெண்கள் தினத்தைக் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க, வேலை, பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் புதியதோர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். பண்ணையடிமை முதலாளித்துவங்களின் தத்துவார்த்தங்களை இவர்கள் மீது திணிக்கும் கல்லூரிகள், அதற்கு நேரெதிர் மேற்கத்திய சூழலை அறிமுகப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் பெண்கள் தினமென்பது இங்கு பெண்ணின் எழுச்சியையோ, அவளின் சுதந்தரதையோ பறைசாற்றும் நிகழ்வென இந்திய கார்போரேட்கள் பேசுவதில்லை. மாறாக எத்னிக் வெர் (Ethnic Wear) உடுத்தும் நாளாக மாற்றியமைத்து வைத்திருக்கிறார்கள். இங்கு எத்தினிக் வெர் என்ற இந்திய பாரம்பரிய உடைகளை உடுத்தச்சொல்வதில் ஒரு சித்தாந்தம் உண்டு.
தமிழக அளவில் இருக்கும் முக்கால் வாசி தனியார் பொறியியல் கல்லூரிகள் நிலப்பிரபுத்துவத்துவ பண்ணையடிமை கொடுமைகளைச் செய்த பணமுதலாளி களிடமே இன்றும் இருக்கிறது. கால-காலமாக பேசிய பிற்போக்கு சித்தாந் தத்தை இவர்கள் இன்று கல்லூரிகளில் படிக்கும் பெண்களின் மீதும் கட்டவிழ்க்கிறார்கள். என் கல்லூரியில் படித்தால் புடவைதான் உடுத்த வேண்டும், சுடிதார் அணிந்து துப்பட்டா போட்டு வரவேண்டும் போன்ற சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பெண் என்பவள் உடலால் ஆனவளென்ற அடிமைத்துவ சட்டம் அவளின் பதின் வயதிலேயே திணிக்கப்படுகிறது. உழைக்க வெளியில் வந்தாலும், படிக்க தூரங்கள் கடந்து போனாலும் பாரம்பரியங்களையும் பிற்போக்குத்தனங்களையும் சுமந்தே போக வேண்டும் என்ற மூளைச்சலவை இங்கிருந்தே துவங்குகிறது . இது அவள் அடுத்து பணிபுரியும் நிறுவனங்களிலும் பின்பற்றப்படுகிறது.
தனது கூடென்பதை முழுதாக தகற்காதவாறே இவர்கள் கற்பிக்கும் சுதந்திர எல்லைக்குள் நின்று பெண், பெண் விடுதலை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பேசி சிலாகிக்கிறாள். தான் பயன்படுத்தப்படுகிறோம் என்ற உண்மையை அறியாதவாறே அவள் நடத்தப்படுகிறாள்.
பாரம்பரிய உடைகளில் பிற்போக்குத் தனங்கள் இருக்கிறது என விவாதிக்க வில்லை, அவற்றின் அசௌகரியங்கள் தெரிந்தும் ஆடை சுதந்திரம் என்பது தனிநபர் தெரிவு என தெரிந்தும் அவற்றை திணிப்பதே ஆதிக்கம் என்பதில் மாற்றுக்கருத்து வைக்க முடியாது.
புடவைகளை உடுத்தி வாகனங்களில் பயணிக்கும்போது கூட்டநெரிசல்களில் சிக்குண்டு வெளிவரும்போது, பேருந்தையோ ரயிலையோ துரத்திபிடிக்க ஓடும்போது அவ்வளவு சௌகரியமான ஆடையாக இருப்பதில்லை.
ஆண் பெண் நட்பிற்குள் தலையிடுவது, அலங்காரங்களை தவிர்க்கச் சொல்வதென சர்வாதிகாரப் போக்கு களை பொறியியல் கல்லூரிகள் கைப்பிடிக் கின்றது. இவற்றுள் மூச்சு திணறி நான்கு வருடம் தப்பித்து புது கார்ப்பரேட் சூழலுக்குள் அவள் செல்லும்போது முன் பில்லாத சுதந்திரமும் வசதிகளும் கிடைக் கின்றன. இதை அனுபவிக்கும் திளைப்பில் அவள் மேல் தொடுக்கப்படும் சுரண் டலைக் கிரகிக்க மறுக்கிறாள் பெண்.
கார்ப்பரேட் மனித வள மேலாளர்கள், ஆண்களை விட பெண்களை அதிகம் தேர்வு செய்கிறோம். ஆணின் ஆக்க அளவை விட பெண்ணின் ஆக்க அளவு வேளைகளில் அதிகம் இருப்பதால் பெண் ஊழியரிடம் அதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகிறது. அவள் அதிக அர்ப்பணிப்புடன் வேலை
செய்யவேண்டும் என்பதால் அவளின் தனிப்பட்ட சுதந்திரங்களான திருமணம் குழந்தை போன்ற விடயங்களில் நிறுவனம் தலையிடுகிறது. அவள் நிறுவனத்தின் தேவையென்பதால் ஆரம்ப காலங் களிலேயே உயர்பதவிகள் வழங்கும்போது ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. வேலை நேரமான ஒன்பது மணிநேரம் முடிந்தும் அலுவல் பணிகள் விதிக்கப்படுகிறது. இது கார்பொரேட்
நிறுவனங்களில் சிக்குண்டிருக்கும் எல்லா பாலினருக்கும் பொதுவென்றாலும், இந்தியா பெண்களுக்கு வீடு பேணுதல் என்பது கூடுதல் பொறுப்பாகி இருக்கிறது. இன்னும் கலாச்சாரம் பண்பாடு குடும்ப அமைப்பிற்குள்ளிருந்து வெளியில் முழுதாய் வராத பெண்களுக்கு இது கூடுதல் சவாலாகவே இருக்கிறது. இதை முழுதும் தெரிந்தும் பெரிய சலனங்கள் இல்லாமல் தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு தலைக்கொள்ளி களில் மாட்டிய பின்பு உறவுச்சிக்கல்களிலும் மன அழுத்தங்களிலும் உலவுகிறார்கள் நவீன பெண்கள் .
நிறுவனங்கள் என்ன செய்யலாம்?
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பிற்போக்குத்தனங்களை ஒழித்து வேலைகளுக்கு பெண்கள் படையெடுப் பதே அரை நூற்றாண்டாகதான் அதிகம் நடக்கிறது. இதை இன்னும் ஊக்குவிக்க வேண்டுமெனில் கார்பொரேட் நிறுவனங்கள் பெண்களுக்கு சாதகமான சூழலை முன்னெடுக்க வேண்டும் .
மாதாந்திர மாதவிடாய் நாட்களுக்கு விடுமுறைகள் தரலாம் .
குழந்தைகள் உள்ள தாய்மார்களுக் கென வேலை நேரங்களை பகலில் தரலாம்.
முடிந்த வரை அலுவல் வேலைகள் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்ணை அலுவல் பொறுப்பு சார்ந்த கேள்விகள் உயரதிகாரிகள் கேட்காமல் இருக்கலாம். சமூகம் என்ன செய்ய வேண்டும்?குடும்பம் பெண்களிடம் இல்லறப் பொறுப்புகளை அதிகம் திணிக்காமல் ஆண் பெண் சமத்துவம் பேணுதல் வேண்டும் .
சமகால ஆண்கள் பழமைவாதங்களை விட்டு வெளிவரப் பார்க்கலாம், பிள்ளைப் பேறு வீடு பொருளாதாரம் சார்ந்த முடிவுகளில் பெண்ணின் வேலையைப் பாதிக்காதவாறு கலந்தாய்ந்து முடிவுகளை எட்டலாம். சமூக சீர்திருத்தம், பெண் விடுதலையைத் தனது கடைசி மூச்சு வரை பேசிய மணியம்மையின் நூற்றாண்டு காலத்திலாவது பெண்ணியம் வளர வழிவகுப்போம். ஏனெனில் இங்கு பெண்ணியம் என்பது பெண் சார்ந்தது அல்ல மனிதியின் மறுப்பெயர்! சக மனிதியின் இயல்பு உரிமை!