சட்டம் தன் கடமையை செய்யும்

சட்டம்  தன் கடமையை செய்யும் – இது நம்மை பொறுத்தவரையில் ஒரு சம்பிரதாய வாக்கியம். ஆனால் அத்தி பூத்தார் போல் சில சமயங்களில் சட்டம் தன் கடமையை செய்ய தான் செய்கிறது. அண்ணலின் அயராத உழைப்பிலும் சமூக சமத்துவ தொலைநோக்கு பார்வையிலும் சட்டம்
உருவாக்கப்பட்டிருந்தாலும் அதனை தற்பொழுது செயல்படுத்தும் அதிகார மையம் ஆதிக்க சக்திகளுக்கே துணை போவது வாடிக்கையாகிவிட்டது.  ஆனால் கடந்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகள் நாடு முழுவதும் பல விவாதங்களை உருவாக்கின. இதில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு தீர்ப்புகள் திராவிட மாதமான கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் வழங்கபட்டன, அதில் ஒன்று கணவனை பெண்ணின் முதலாளியாக கருதும் பிரிவு 497ன்  நீக்கம் மற்றொன்று ஒடுக்கப்பட்டோரிலேயே கடைநிலையில் இருக்கும் ஓரினசேரக்கையாளர்களை  குற்றவாளிகளுக்கும்  பிரிவு 377ன் நீக்கம். இத்தீர்ப்புகளை ஈரோட்டு கண்ணாடி கொண்டும் அண்ணலின்  பேரறிவு கொண்டும் அணுக வேண்டியது அவசியமாகிறது , எதுவாயினும் சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கியிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது.
377
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவு  “இயற்கைக்கு மாறான பாலுறவு” கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. எது இயற்கையான பாலுறவு என்பதே இங்கு  விவாதத்துக்குரியது. ஆண் பெண் உறவு என்பது இனப்பெருக்கத்துக்கு உதவுவதால் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறையே தவிர இயற்கையானது இந்த முறை மட்டும் தான் என்று தீர்மானிக்க முடியாது. இந்நிலையில் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட  377ம் பிரிவை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6 2018 அன்று ரத்து செய்தது. ஓரினசேர்க்கையாளர் களை குற்றவாளிகளாக கருத முடியாது என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை பாரபட்சமின்றி உள்வாங்க வேண்டு மெனில் பெரியாரின் பகுத்தறிவு கொண்டு அணுக வேண்டும். அவர் என்றுமே அடக்குமுறைகளுக்கு எதிராகவே முழங்கி னார். தாழ்த்தப்பட்டோர்,பெண்கள், உடல் ஊனமுற்றோர், கைம்பெண்கள், விலைமாதர்கள், திருநங்கைகள், ஓரினசேர்க்கையாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அடக்குமுறைக்கு உள்ளானவர்களாக இருப்பர். இவர்களில் ஓரினசேர்க்கையாளர்கள் தங்கள் சொந்த குடும் பத்திலேயே புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளா கின்றனர். இவர்கள் உடல் இச்சைக்காக அலைபவர்கள் என்ற ஒரு பொது புத்தியை நம்முடைய சினிமாக்கள் மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறது.
மருத்துவர்களின் கூற்று படி பார்த்தால் ஒரு மனிதனின் உடலியல் தேவை என்பது அவர்களின் ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே ஹார்மோன்களுடன் ஒத்துபோவாமல் உறவு புரிவது தான் இயற்கைக்கு எதிரானதே தருவ ஓரின சேர்க்கை அல்ல.
497
கணவருக்கு தெரியாமல் அவரது மனைவியுடன்,  உறவில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம், இந்திய தண்டனை சட்டம் 497ம் பிரிவு. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். ஒரு பெண்ணுக்கு கணவன் முதலாளி ஆகமுடியாது என்பது தான் இந்த தீர்ப்பின் கரு. ஆனால் வழக்கம் போலவே இந்த தீர்ப்பும் மிகவும் தவறாக புரிந்து கொள்ளபட்டது. ஒரு படி மேலே போய் தினம் தினம் நடக்கும் ‘கள்ளக் காதல்’ தொடர்பான கொலைகளையும் இந்த தீர்ப்பின் காரணமாக தான் நடக்கின் றன என சம்பந்தப்படுத்துவது அபத்தமா னது.  ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக அவளுடைய கணவன் எவ்விதத்திலும் அவளுக்கு எஜமானன் ஆக முடியாது. இந்த தீர்ப்பினால் நம் கலாச்சாரம் கெட்டு போய்விடும் என்பது வெற்று கூச்சல். இந்த சட்டம் எந்த விதத்திலும் பெண்ணை தண்டிக்க கூடியது அல்ல, மற்றொருவரின் மனைவியுடன் உறவு கொள்ளும் ஆணை மட்டுமே இந்த சட்டம் தண்டிக்கும். அதிலும் கணவனின் ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு தண்டனை வழங்கப் படாது, இந்த சட்டத்தை ரத்து செய்வதற் கான முக்கிய காரணி அது மட்டுமே. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சில பல போலி சாமியார்களை இந்த சட்ட நீக்கம் காப்பாற்றும் என்ற ஒரு தர்க்கத்தையும் பகுத்தறிவாளர்கள் பதிவிட இங்கு தவறவில்லை.
ஈபிகோ சட்டப்பிரிவு எண்கள் இளைஞர்கள் உதட்டில் உச்சரிக்கப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த தீர்ப்புகளுக்கு எதிராக பகிரப்படும் செய்திகளும் மீம் களும் அவர்களின் சட்டம்,சமூக அரசியல் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பண்பாட்டு தளத்தில் இயங்குபவர்களும் சமூக நீதி தளத்தில் இயங்குபவர்களும் முரண்படும் முக்கிய புள்ளி இவ்வைகை யான தீர்ப்புகள். வலதுசாரி சக்திகள் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து வரும் இந்த சூழலில் அவர்களின் சூழ்ச்சிக்கு சமூக நீதியின் முன்னோடி மாநிலமாம் தமிழ்நாட்டின்  இளைஞர்களும் பலியாவது வேதனை அளிக்கிறது. மேலும்  மதவாத சாதியவாத சக்திகள் இந்த தீர்ப்புகளை மையப்படுத்தி தங்களை கலாச்சார காவலர்களாக காட்டிக்கொள்ள முனைப்புடன் செயல்படுகின்றனர். இவற்றை முறியடிக்க நாம் கூடுதலாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இளைஞர்கள் மத்தியில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.