தந்தை பெரியார் – டாக்டர் அம்பேத்கர்

ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் !

ந்தியாவின் சமூகப் புரட்சி வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சியாளர்கள் தெற்கே தந்தை பெரியார்; வடக்கே டாக்டர் ‘பாபாசாகேப்’ அம்பேத்கர்!

இவர்கள் இருவரும் லட்சியப் பயணத்தில் – கொள்கைப் போராட்டங்களில் இரு இணை கோடுகள்! தத்துவங்களில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!!

இவர்களுடைய ஒரு பொன்மொழியை எடுத்தக் கொண்டு, அதனடியில் ‘தந்தை பெரியார்’ என்று போட்டாலும், ‘டாக்டர் அம்பேத்கர்’ என்று மாற்றிப் போட்டாலும் மாறுபாடே இல்லாத அளவுக்கு ஒரே வகைச் சிந்தனையாளர்களின் கருத்துக் கருவூலங்களாகவே அவை மிளிறும்!

டாக்டர் அம்பேத்கர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியாவிற்கு – தனது சொந்த மாநிலமான பம்பாய்க்குத் திரும்பிய பின், ‘தன் பிள்ளை, தன் வீடு, தன் மக்கள்’ என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு சுயநல வாழ்வு வாழாமல், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சமத்துவத்திற்கும், சம உரிமைக்கும், சம வாய்ப்புக்கும் திட்டமிட்டே செயலாற்ற அமைப்புகளை உருவாக்கினார்.

‘குரலற்ற(ஊமையர்களின்)வர்களின் குரல்’ (‘மூக் நாயக்’) என்று மராத்தி மொழியில் அவர் நடத்திய ஏட்டில், 1924இல் தெற்குத் திருவிதாங்கூர் ராஜ்யத்தில் இருந்த ‘வைக்கம்’ என்ற ஊரில், உள்ள மகாதேவர் கோயிலின் நான்கு வீதிகளிலும், ஒடுக்கப்பட்ட  – தாழ்த்தப்பட்ட மக்களாகிய “ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள்” என்ற ‘கீழ் ஜாதியார்’ தெருக்களில் நடக்கக் கூட உரிமையற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து அங்கிருந்த அன்றைய காங்கிர° தலைவர்கள் ‘சத்தியாகிரகத்தை – மறியலை’த் துவக்கினர்; அவர்களை அவ்வரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்; அவ்வறப்போரினை ஒடுக்கி விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தான், தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிர° தலைவர் என்ற நிலையில், சிறையில் வாடியவர்களின் கடிதம் கண்டு, உடனே அங்கே சென்ற வைக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் சென்று தொடர் போராட்டமாக்கினார்.

பெரியார் இருமுறை கைது; தனது துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார் உட்பட அப்போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்திய சமூகப் புரட்சி வரலாற்றில் இப்போராட்டம்தான் முதல் பெரும் போராட்டம். மனித உரிமைகளைப் பெறுவதற்கு நடத்தப்பெற்ற போராட்டம்.

1924இல் அண்ணல் காந்தியார், தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் ஏன் கேரளாவிற்குச் சென்று போராடுகிறீர்கள்” என்று எழுதி, தமிழ்நாடு திரும்பச் சொன்னார் – மேல்ஜாதி நம்பூதிகளின் புகார்களை நம்பினார்.

தந்தை பெரியார் அவர்களோ, “மகாத்மா அவர்களே, நாயும், பன்றியும், கழுதையும் சுதந்திரமாக அத்தெருக்களில் நடமாடு கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த நம் மக்கள் ஜாதி இழிவு – பிறவி பேதம் காரண மாக நடமாட முடியாத நிலை வெட்கப்படக் கூடியதல்லவா? எனவேதான் நான் இப்போராட்டத்தை – கேரள தலைவர்கள் விருப்பத்தை ஏற்று தொடருகின்றேன் என்று கூறி வீரியத்துடன் நடத்தி வெற்று பெற்று, ‘வைக்கம் வீரர்’ ஆனார்.

தந்தை பெரியார்தம் இப்போராட்டத்தினை அறிந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவர் அப்போது நடத்திய ‘மூக் நாயக்’ ஏட்டில் பின்வருமாறு எழுதினார் என்ற செய்தியை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

“…But the most outstanding event of the year (1924) concerning the struggle of the Depressed Classes was the Satyagraha or the passive resistance sponsored by Ramaswami Naicker, a Non-Brahmin leader at Vaikom in the Travancore State for vindicating the rights of the Untouchables to use a certain road to which they were forbidden entry. Its moral pressure and the spirit of righteous assertion had a tremendous effect, and the orthodox Hindus, for a while, regained their civic sense and sanity, and the road was thrown open to the untouchables”

… Ambedkar was watching these developments very carefully. He referred to the Vaikam struggle, a few months later, very touchingly in one of his editorials, on the eve of the Mahad satyagraha. These were notable events.

இதன் தமிழாக்கம்:

“…. மிகவும் குறிப்பிடத்தக்க போராட்ட நிகழ்வொன்று 1924-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சம°தானத்தில் உள்ள வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்தான் அது.   வைக்கத்தில் உள்ள கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நுழையக் கூடாது எனும் வழக்கத் தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாகும் அது.  போராட்டம் ஏற்படுத்திய தார்மீக தாக்கமும், சரியானது செய்திடப்படவேண்டும் என்ற நினைப்பும் வைதீகப் போக்குடைய   இந்து மதத்தவரிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. குடிமைப் பொறுப்பும், புத்திசாலித்தனமும் இணைந்து

உணரப்பட்டதால் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நடந்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

“… அம்பேத்கர் இத்தகைய நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். மகத குளம் – இறங்கும் போராட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத்தைப் பற்றி மிகவும் உருக்கமாக மனதைத் தொடும் வகையில் தலையங்கம் தீட்டியிருந்தார்.  இவைகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக அமைந்தன.”

அதுதான் கருத்தியல், கொள்கை, லட்சியங்கள் மூலம் பெரியார் பற்றிய புரிதலும், நேரில் சந்திக்காவிட்டாலும் லட்சிய ஒருங்கிணைப்பான அருந்தோழர்களாக இருவரையும் மாற்றிய முதல் கட்டமாகும்!

இரண்டாவது, டாக்டர் அம்பேத்கர் பஞ்சாப் – லாகூரில் ‘ஜாட்பட் தோரக்’ மண்டலில் ஜாதி ஒழிப்பு பற்றிப் பேச அவ்வமைப்பினர் அழைத்து, அவர்களது மாநாட்டிற்கே தலைமை தாங்க அழைத்தனர்.

டாக்டர் உரையை ஆங்கிலத்தில் தயாரித்து உரையாற்ற இருந்த நிலையில், அவரது உரையை முன்கூட்டியே படித்த வரவேற்புக் குழுவினர், அதில் ஹிந்து மதம் – கடவுள் – சா°திரங்கள் பற்றிய குறிப்புகள் – கண்டனங்களை நீக்கிவிட்டு சொற்பொழிவாற்றக் கேட்டனர்.

சுயமரியாதை உணர்வு பொங்கிய நிலையில் அம்பேத்கர் மறுத்துவிட்டு, தானே அதை ஒரு தனி நூலாக ‘ஹnnihடையவiடிn டிக ஊயளவந’ என்று சிறு நூலாக வெளியிட்டார் 1934இல். செய்தி அறிந்த தந்தை பெரியார், அதனை டாக்டரிடமிருந்து கேட்டுப் பெற்று தமிழில் மொழிபெயர்த்து, 4 அணா விலையில் பல்லாயிரக்கணக்கில் பரப்பினார்.

அதன்மூலம் தமிழ்நாட்டில் முதன்முறை யாக டாக்டர் அம்பேத்கர் புகழ், பெயர் பரப்பக்காரணமாக அமைந்தார்.

பிறகு குஜராத்தி போன்ற மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டது. என்றாலும் முதல் மொழிபெயர்ப்பு தந்தை பெரியார் வெளியிட்ட ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் டாக்டரின் உரையே முதன்முதலில் வெளியானது!

இன்னமும் சந்தித்துக் கொள்ளவே இல்லை இருவரும்!

1940இல் தந்தை பெரியாரை சந்திக்க டாக்டர் விருப்பத்திற்கேற்ப, பம்பாய் தோழர்களின் முயற்சியால்தான் அச்சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு 1944இல், சென்னையில் டாக்டர் அம்பேத்கர் – தந்தை பெரியார் சந்திப்பு. இப்படி  குறைந்தது  4  அல்லது  5  முறை  இருவரும்  சந்தித்து  கருத்துக்களைப்பரிமாறிக்கொண்டனர். இறுதியாக 1954இல் பர்மாவில் (இன்றைய மியான்மரில்) உலக புத்தர் மாநாட்டில் இருவரும்ச ந்தித்து நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்த நிலையில்தான், 1956 அக்டோபர் 14இல்நாகபுரியில் – புத்த நெறியை டாக்டர் அம்பேத்கர் தழுவி, இந்துவாக நான் ஒருபோதும் சாகமாட்டேன்; சமத்துவம், சுயமரியாதை உள்ள மனிதனாகவே வாழ்ந்து, சாவேன் என்று கூறிய பிரகடனத்தை நடைமுறைப்படுத்தி உயர்ந்தார்!

தந்தை பெரியார் அவர்களுடன் பர்மாவில் நீண்ட நேரம் கலந்து ஆலோசித்த நிலையில், டாக்டரிடம் தந்தை பெரியார் கூறினார், “நீங்கள் பல லட்சம் தோழர்களுடன் சென்று பவுத்தத்தைத் தழுவுங்கள். அது வரலாற்று நிகழ்வாகும்’ என்று கூறிய யோசனையை செயல்வடிவத்தில் காட்டினார் டாக்டர்!

ஹிந்து மதம் என்ற வர்ணாசிரம மதம்தான் ஜாதிக்கு – தீண்டாமைக்கு ஊற்று; இந்து மதக் கடவுள்கள் குறிப்பாக பிரம்மா, கிருஷ்ணன் ஆகியோர் கூற்று என்று மனுதர்ம சா°திரத்திலிருந்தும், பகவத் கீதையிலும் கூறப்பட்டிருப்பதை இரு புரட்சியாளர்களும் ஒரே குரலில் வெவ்வேறு இடங்களில் கண்டித்து முழங்கினர்.

மனு°மிருதியைக் கொளுத்தும் போராட்டங்களை இருவரும் வடக்கே, தெற்கே நடத்தினர்.

வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்  – மகத் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் – நிகழ்த்தினார்கள். 1924இல் வைக்கம். 1927இல் மகத் சத்தியாகிரகம்.

இப்படி ஏராளம்.

இந்திய அரசியல் சட்டத்தை வகுக்க, ஏற்படுத்தப்பட்ட வரைவுக்குழுவில் (இறுதி வடிவில்கூட) ஆறு பேர் குழுவில் 4 பேர் பார்ப்பனர்கள், ஒருவர் தாழ்த்தப்பட்டவர், ஒருவர் மு°லிம். 4 பேர்களும் டாக்டரை ஒரு ‘வாடகைக் குதிரையாக்கி’ (ழயஉம) பயன்படுத்தினர். அவரே, பிறகு மாநிலங்கள் அவையில் வேதனையுடன் கூறி, “நான்தான் அரசியல் சட்டத்தை எழுதியதாகக் கூறுகிறார்கள்; நான் அதற்குத் தீ வைக்கவும் தயாராக இனி முதல் ஆளாக இருப்பேன்” என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் (ராஜ்ய சபை) 2.9.1953இல் முழங்கினார்!

தமிழ்நாட்டில் 1957இல் ஜாதியைக் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டம் நடத்தி 3,000 பேர் கைதாகி, 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுப வித்தனர். உள்ளே நால்வரும், வெளியே 14 பேரும் உயிர்த்தியாகமும் செய்தனர்!

இப்படி எத்தனை எத்தனையோ ஒற்றுமைகள். ஜாதி ஒழிப்பு, வேத – பார்ப்பன – ஹிந்துமத எதிர்ப்பு – பெண்ணடிமை ஒழித்து, பெண்ணுரிமையைப் பேணுதல் – எல்லாவற்றிலும் ஒரே கருத்து.

இந்திய சமூகத்தின் சமூக விடுதலைக்கு இந்த இரண்டு கலங்கரை விளக்குகளின்

வெளிச்சத்தில்தான் ஜன சமுகத்தின் – சமூக மாற்றக் கப்பல்கள் பயணிக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள்   – மாணவர்கள் இதனைப் புரிந்துகொடனர்; இந்த இரண்டு

தத்துவக் கர்த்தாக்கள் – புரட்சியாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி உலகம் முழுவதிலும்

இவர்களின் நூல்களுக்கு ஏற்பட்டுள்ள ‘கிராக்கியும்’ அதனை அமிழ்து, அமிழ்து என்று உண்டு, ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புக்கான அறப் போர்க்களம் நோக்கிப் புறப்பட ஆயத்தமாகி விட்டார்கள் என்பது நமது நம்பிக்கை  ஒளியாகும்!

வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!

வரும் அவர்கள் விரும்பிய புது உலகம்!

– ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர் திராவிடர் கழகம் )