“மறக்க முடியுமா”
படத்தில் கலைஞர் தீட்டிய,
“காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்.
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஏழைகள் வாழ இடமேயில்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை”
பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகள்
கோவலனுக்கு
வழங்கும் அறிவுரைப் போன்று அமைந்திட்ட
பாடல் “வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்.
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் – அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழுமூடன்
வருமுன் காப்பவன்தான் அறிவாளி – புயல்
வருமுன் காப்பவன்தான் அறிவாளி – அது
வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி.”
“வாலிப வயதில் கண் போன போக்கில் காலும்
கால் போன போக்கிலே மனமும்
மனம் போன போக்கில் மனிதனும் சென்றால்
துடுப்பில்லாத படகு போல் அலைக்கழிக்கப்படும்”
திரைப்பட வசனங்களில்
“ராஜாராணி”
படத்தில் சாக்ரடீஸ் வேடம் தரித்து நடிகர்திலகம்
சிவாஜி கணேசன் பேசிய வசனம்
“ஏதென்ஸ் நகரத்தின் எழில்மிக்க
வாலிபர்களே ஓடிவாருங்கள்! ஓடி வாருங்கள்!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம்
கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்.
வீரம் விலை போகாது,
விவேகம் துணைக்கு வராவிட்டால்!
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே
தூக்கிய ஈட்டி மட்டும் போதாது வீரர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தை
ஏந்திக் கொள்ளுங்கள்!”