பம்ப்செட் எதற்கு?
1973 ஆம் ஆண்டு கலைஞர் அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவற்றின் மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் :-
கே.டி .கே . தங்கமணி : நான் ஒரு கவிதையைப் படிக்க விரும்புகின்றேன் . கலைஞர் எதிரில் நிற்கும்போது எனக்கும் கொஞ்சம் கவிதை வர ஆரம்பிக்கின்றது கேளுங்கள்.
“மழையின்றி மானாவாரிப் பயிர் போனது
கரண்டின்றி இறவைப் பயிர் போனது
இப்போது மழையும் வந்து
கரண்டும் வந்தால்
பம்ப்செட் இன்று பயிர் போனது
அதாவது மழையும் வந்தது மிசாரமும் வந்தது. அனால் பம்ப்செட் போய் விட்டதே “ என்றார்.
உடனே கலைஞர்: அந்தக் கவிதைக்கு ஒரு விளக்கம்
மழையின்றி மானாவாரிப் பயிர் போனது
கரண்டின்றி இறவைப் பயிர் போனது
இப்போது மழையும் வந்து
கரண்டும் வந்தால்
பம்ப்செட் இன்றி பயிர் போனது.
சரி . இப்போது மழை வந்துவிட்டது- பயிர் வீணாகாமல் காப்பாற்றப்படுமே. இந்நிலையில், பம்ப்செட் எதற்காக?
கே.டி.கே : என் கவிதையில் ஊனம் கண்டுபிடித்த முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் . வேறு யாரும் இவ்வளவு சாமர்த்தியமாக அதுவும் இவ்வ்ளவு விரைவிலே, கண்டுபிடித்துப் பதில் சொல்லியிருக்க முடியாது (சபை ஆரவாரத்தில் ஆழ்ந்தது)
[கலைஞரின் நகைச்சுவை நயம் – கவிஞர் தெய்வச்சிலை ]