முதல் ஆண்டு அறிக்கை

வணக்கம்,

புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் ஜாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும் , ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையைப் புரட்டி போடவும், பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த கருத்துடைய தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம், சில மாதங்கள் அமைப்பாக இல்லாமல் இயங்கி வந்தது.

மாதாந்திர செயல்பாடுகள்

ஏப்ரல் 14, 2017
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமைப்பு துவக்கம்.
பல்வழி அழைப்பு மூலம் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அமைப்பை துவங்கி வைத்து சிறப்புரை.

மே 3, 2017
தோழர் ஓவியா ( சிறப்புரை: பெரியார் அம்பேத்கர் பார்வையில் தொழிலாளர்கள் )

மே 19, 2017
தோழர் வே மதிமாறன் ( சிறப்புரை: பெரியார் அம்பேத்கர் ஒரு தத்துவத்தின் இரு மொழிகள் )

ஜூன் 2, 2017
தோழர் பழமைபேசி ( சிறப்புரை: தமிழ்மரபு வழியில் பகுத்தறிதல் )

ஜூன் 23, 2017
தோழர் ஆதவன் தீட்சண்யா ( சிறப்புரை: சாதி மறுப்பும், சாதி ஒழிப்பும் )

ஜூன் 30, 2017
2017 ஆம் ஆண்டு பெட்னா விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் முதல் இணையமர்வு நடத்தப்பட்டது. கவிஞர் சுகிர்த ராணி, திரைப்பட நடிகை தோழர் ரோகினி கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தோழர்கள் அந்த இணையமர்வின் மூலம் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஜூலை 21, 2017
திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் அய்யா சுப வீரபாண்டியன் ( சிறப்புரை: இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் )

ஆகஸ்ட் 18, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் ( சிறப்புரை: பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன் ? )

செப்டம்பர் 02, 2017
இந்துத்துவ அரசால் நீட் என்ற சமூக அநீதி கொண்டுவரப்பட்டு பணிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்தும் மருத்துவர் கனவை இழந்த குழந்தை அனிதாவின் மரணத்திற்கு நியூஜெர்சி, மிச்சிகனில் மாகாணத்தில் நினைவேந்தல்கள்.

செப்டம்பர் 16, 2017
மிச்சிகன் மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகளை தமிழ் – ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தி தந்தை பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றனர்.

செப்டம்பர் 17, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ( தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புரை ) செப்டம்பர் 20, 2017
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

செப்டம்பர் 23, 2017
நியூ ஜெர்சி மாநிலத்தில் தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கருத்தரங்கம் ஏற்பாடு செய்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கொண்டாடியது. அனிதாவை பலி வாங்கிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நியூயார்க் இந்திய தூதரகம் முன்பு புலம் தமிழர் ஏற்பாடு செய்த கண்டனக்கூட்டங்களில் பெரியார் அம்பேத்கர்
படிப்பு வட்டம் கலந்து கொண்டது.

அக்டோபர் 20, 2017
மனநல மருத்துவர் ஷாலினி ( The Three Men and All Women என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் )

நவம்பர் 3, 2017
புத்தகம் பேசலாம் என்ற புதிய நிகழ்ச்சி அறிமுகம்
புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள் ? – பேசுபவர்: பழமை பேசி

நவம்பர் 17, 2017
ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான் ( சமூக நீதியும் அடித்தட்டு மக்களும் )

டிசம்பர் 15, 2017
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ( சிறப்புரை : பெரியாரியம் அம்பேத்கரியம் பெண்ணியம் மேலும் சில கேள்விகள் )

ஐனவரி 3, 2018
புத்தகம்: பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், ராமர் கோவிலும், பேசுபவர்: பேராசிரியர் சிவப்பிரகாசம்.

ஐனவரி 15, 2018
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் அடுத்த கட்ட செயல்பாடாக “The CommonSENSE” என்ற இணைய இதழை ஐனவரி மாதம் 15ம் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் முதல் மாத இதழாக வெளியானது.

ஐனவரி 17, 2018
எழுத்தாளர் தோழர் பாமரனுடன் ஓர் உரையாடல்

பிப்ரவரி 4, 2018
தமிழ்த் தாய் வாழ்த்து காஞ்சி சங்கராச்சாரியால் (விஜயேந்திரன்) அவமதிக்கப்பட்டபோது அதனை கண்டித்து கண்டனம் அறிக்கை. நியூ ஜெர்செயில் தோழர்கள் கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது.

பிப்ரவரி 7, 2018
புத்தகம்: அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு , பேசுபவர்: தோழர் பார்த்திபன்

பிப்ரவரி 18, 2018
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் இரு வார பயணமாக அமெரிக்கா வந்திருந்தார். அதில் முதல் நிகழ்வை நியூ ஜெர்சி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தோழருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது, அதில் தோழருக்கு
“சமூக நீதிக்கான செயல் விருது “ அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 21, 2018
பெண்ணிய கவிஞர் தோழர் சல்மா (சிறப்புரை: இரண்டாம் ஜாமம் )

மார்ச் 7, 2018
புத்தகம்: இராவண காவியம்  , பேசுபவர்: தோழர் ஆசிப்

மார்ச் 21, 2018
போதி நிறுவனத்தின் இயக்குநர் தோழர் ராஜ்மோகன்
( Positive Parenting என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் )

ஏப்ரல் 04, 2018
புத்தகம்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையாக இருப்பது ஆகமமா? வருணாசிரமமா ? , பேசுபவர்: பேராசிரியர் வே சிவப்பிரகாசம்.

ஏப்ரல் 14, 2018
நியூ ஜெர்சி மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா ஓவிய போட்டி, கருத்தரங்கம் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஏப்ரல் 15, 2018
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா அம்பேத்கர் இயக்கமும் இணைந்து மிச்சிகன் மாகாணத்தில் அண்ணல் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது, அதில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஓராண்டு நிறைவு சிறப்புச் சொற்ப்பொழிவின் போது பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் pascamerica.org இணையதளத்தை வெளியிட்டார்.

இதர செயல்பாடுகள்

வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பற்றி சந்தேக கேள்விகளைத் தொகுத்து அதற்காக பதில்களையும் வெளியிட்டு இருக்கிறோம். அது பலரால் பகிரப்பட்டு பெரும் ஆதரவை அளித்திருக்கிறது, அதை தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பற்றிய சந்தேக கேள்விகளை தொகுத்து பதில்களை தயாரித்து கொண்டிருக்கிறோம் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் தந்தை பெரியார் பற்றி 10 நிமிட வாழ்க்கை வரலாற்று காணொளியை ஆங்கிலத்தில் YouTube – PASC America சேனலில் வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்காவில் ; கடல் கடந்து வந்த சாதி மத பிற்போக்குவாதிகளுக்கு சாட்டையாக சுழலும் !!