Being Dalit !

During a very casual conversation with one of my friends, I happened to fret about why it was so hard and yetimperative to be married. She then went ahead and asked me a bunch of questions about the kind of guy I was inclined tobe with, how he should look and other girlish things.

பெண்களின் உடை அரசியல் !

ஆதி மனிதன் உடை இன்றி காடுகளில் அலைந்து திரிந்த போது பெண்ணின் உடல் அடிமைப்படுத்தப்படவில்லை, இழிவாகப் பார்க்கப்படவில்லை . நாகரிகம் அடைந்த மனிதன் , ஆடைகளை கண்டுபிடித்தான், மதத்தை உருவாக்கினான் , இந்த இரண்டு கூறுகளுமே பெண்களை , அவர்கள் உடலை இழிவாகப் பார்க்க இந்தச் சமூகத்தை பழக்கப்படுத்தியது. எப்படி பெண்ணின் இயற்கை மாதவிடாய் குருதி தீட்டு என அருவருப்பாகப் பார்க்கப்படுகிறதோ அதே போன்று தான் பெண்ணின் உடலும் இங்கு அவமானம், இழுக்கு என பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில் இருந்து தான் , அவள் உடலை வெளிக்காட்டக்கூடாது ,   அவள் ஆணின் பொருள் என்னும்  , மதங்களின் [...]

நன்றி மர்வானா !!

எனக்குத் தெரியாது இது நான் தானாவென மர்வானாவை புகைத்து உள் நுழையும் வரை ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட எனதுடலில் சிறகொன்று முளைக்குமென எனக்கே தெரியாது தொண்டைக்குள் வாளின் கூர்மையோடு இறங்கும் புளிப்பேறிய வைனின் சுவையில் எனதுடல் ஒரு பருந்தென நள்ளிரவின் சுடர் இருளை முழு நிர்வாணத்தினால் கிழித்து எறிய முடியுமென மூளையில் பதுங்கியிருந்த பைசாசுகளின் சுமையை சில முத்தங்களால் இறக்கி வைப்பேனென யாரோ சொன்னது போலன்றி எனது இந்த உடல் நிலத்தின் அழுக்காலானது கலைந்து திரியும் [...]

ஆறறிவின் அற்புதம் !!

இந்த உலகில் மிகப் பெரியது கடவுள் சக்தி என்று ஒரு சாராரும், இல்லை ! இல்லை ! அறிவியலின் சக்திதான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும், இவை இரண்டும்  இல்லை மனிதம்தான் மிகப் பெரியது என்று ஒரு சாராரும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடவுள் சக்தியே மிகப் பெரியது என்று வாழ்பவர்கள் தன் சக மதத்தினரைக் காட்டிலும்  வேற்று மதத்தவனை எவ்வாறு மதிக்கிறார்கள்  என்பதை நாம் தினசரி உலகெங்கும் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மூலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சில மதத்தைப் பின்பற்றுபவர்கள் வேற்று மதத்தவனை இழி சொல் [...]

இந்துத்துவ மாட்டரசியல் !!

பசுக்களைப் புனிதம் என்றும் அவைகள் முனிகள், தேவர்கள், கடவுள்கள் குடியிருக்கும் கோவில், ஆகவே கோமாதா என்றும் தங்கள் முன்னோர்கள் அதாவது ஆரியர்கள் இறைச்சியை உண்டதில்லை என்றும் குறிப்பாகப் பசுவை உண்டதில்லை என்றும் அடுக்கடுக்கான பொய்களை வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மையில் உயிரினங்களைப் பலி தரும் வேள்விகள் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டது என்பது வரலாற்றாய்வு அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. இந்திரனுக்குக் காளைகள், அக்னி, வருண, மித்ரா பகவானுக்கு செந்நிற பசு, புள்ளிகளைக் கொண்ட பசு என விதவிதமாக பசுக்கள் பலியிடப்பட்டு விருந்தளிக்கப்பட்டது என்று [...]

இந்துத்துவ பூமியில் ஓர் இளம் புரட்சியாளன்…

இந்தியத் திருநாட்டில் பார்ப்பனீய பயங்கரவாதத்திற்குப் பகடை உருட்டும் பல மாநிலங்களில் முதன்மை மாநிலமாம் குஜராத் மாநிலத்தில் பார்ப்பனீயத்தின் கொடூரத் தாக்குதலில் கேட்பாரின்றி சிக்கித் தவித்த ஓர் சமூகத்தின் அவலத்தைக் குரல் கொடுக்கத் துணிந்த புரட்சி இளைஞனைப் பற்றித்தான் இக்கட்டுரை விரிவாக விளக்கவிருக்கிறது. ஆம் நீங்கள் அறிந்த பார்ப்பனீய நச்சு மண்ணில் முளைத்த நெருப்புச் செடி, இந்துத்வா இழிவுகளை இடித்துரைத்து இயங்க வழியின்றி இருந்த சமூகத்தின் இன்னலின் ஈரத்தில் வளர்ந்த ஜிக்னேஷ் நட்வர்லால் மேவானி என்ற புரட்சி இளைஞனை பற்றித்தான் இக்கட்டுரை விவரிக்கிறது.மோகன்தாஸ் [...]

தந்தைபெரியாரும் பொங்கல் திருநாளும்!

  இன்று உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப் பண்டிகையாக்கப் பார்த்தனர். தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொண்டார். “மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே [...]